கலவரத்தை தூண்டும் பிரிவில் எச்.ராஜா மீது பாய்ந்தது வழக்கு!

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அண்மையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டார்.

தமிழக காவல்துறை, உயர்நீதிமன்றம் ஆகியவை மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை சுமத்தும் ஆடியோவும் பதிவாகியுள்ளது. ஆனால் அது தன்னுடைய குரல் அல்ல என எச்.ராஜா விளக்ம் அளித்துள்ளார். 

அவரது ஆவேச வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்ததையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்தன.   இந்நிலையில் எச். ராஜா மீது புதுக்கோட்டை திருமயம் காவல்நிலையத்தில் 143, 188, 290, 294 பி, 353, 153 ஏ, 505 (1), 506 (1) ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தில் தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திலும் வழக்கறிஞர்கள் எச்.ராஜா மீது புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version