கரோலினாவை புரட்டிப்போட்ட புளோரன்ஸ் புயல் – பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள புளோரன்ஸ் புயலுக்கு, இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு கரோலினா பகுதியை தாக்கிய புளோரன்ஸ் புயலால் பல்லாயிரக் கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, அந்த மாகாணம் இருளில் மூழ்கி உள்ளது. புயலின் பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி புயல் நகர்ந்து சென்றாலும், ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்று அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version