கரைபுரளும் மகாநதி -வெள்ள அபாய எச்சரிக்கை

ஒடிசாவில் தென் மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஹிராகுட் அணையிலிருந்து 8 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மகாநதியின் மீது கட்டப்பட்டுள்ள ஹிராகுட் அணையில் 25 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மகாநதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மேலும் ஒடிசாவில் கட்டாக், பூரி உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version