கருணாஸுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் எம்.எல்.ஏ மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 23-ம் தேதி காலை கைது செய்யப்பட்ட அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கு உள்பட மேலும் 2 வழக்குகளில் கருணாஸ் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில், கூடுதலாக பதியப்பட்ட வழக்குகளில் ஒன்றான கொலை முயற்சி வழக்கில் கருணாசுக்கு நீதிமன்ற காவல் அளிக்க நீதிமன்றம் மறுத்தது. ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களை தாக்கிய விவகாரத்தில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version