கண்டன பொதுக்கூட்டம்: சேலத்தில் முதலமைச்சர், தேனியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு துணை போன திமுக, காங்கிரஸ் கட்சிகளின் துரோகச் செயலை கண்டித்து தேனியில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சேலத்தில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பொதுக்கூட்டங்களில் மாவட்ட வாரியாக பேசுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கழக செய்தி தொடர்பாளர் டாக்டர். வைகை செல்வன் – தேனி, கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – சேலம், கழக அவைத்தலைவர், மதுசூதனன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் சமரசம் மற்றும் நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா – திருவள்ளூர்.

கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் கழக இலக்கிய அணி துணை செயலாளர் நிர்மலா அருள் பிரகாஷ் – காஞ்சிபுரம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்னு – தஞ்சாவூர்.

கழக அமைப்பு செயலாளர் பொன்னையன் மற்றும் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் திருமதி நிர்மலா பெரியசாமி – கடலூர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் ராஜலட்சுமி – திருநெல்வேலி.

கழக கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் – கரூர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஏ.கே.ராஜேந்திரன் – திண்டுக்கல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் – ஈரோடு.

கழக அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கவிஞர் முத்துலிங்கம் – விழுப்புரம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் – திருப்பூர்.

கழக அமைப்புச் செயலாளர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் கழக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் – நாமக்கல், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி – கோயம்புத்தூர், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கழக செய்தி தொடர்பாளர்கள் கோகுல இந்திரா மற்றும் அழகுராஜா – சென்னை.

கழக அமைப்புச் செயலாளர் செம்மலை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் – தருமபுரி, கழக அமைப்புச் செயலாளர் ராஜகண்ணப்பன் மற்றும் கழக சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா – ராமநாதபுரம், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் கழக கலைப் பிரிவு இணை செயலாளர் நாஞ்சில் அன்பழகன் – கன்னியாகுமரி.

கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபில் – வேலூர், கழக அமைப்புச் செயலாளர் ஜெ.சி.டி. பிரபாகர் மற்றும் கழக அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் இயக்குநர் மற்றும் நடிகர் ரங்கநாதன் – அரியலூர்.

கழக புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ – மதுரை, அண்ணா தொழிற்சங்கப் பேரவை எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் புலவர் பி.எம்.செங்குட்டுவன், திரைப்பட இயக்குநர் வீ.ஜெயபிரகாஷ் – பெரம்பலூர்.

கழக அமைப்புச் செயலாளர் மற்றும் இந்து சமய நிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் கழக மகளிர் அணி இணை செயலாளர் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா மற்றும் திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் – திருவண்ணாமலை, கழக கலைப்பிரிவு செயலாளர் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி – விருதுநகர்.

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் – திருவாரூர், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மற்றும் நடிகர் குண்டு கல்யாணம்- நாகப்பட்டினம், கழக அமைப்பு செயலாளர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் – புதுக்கோட்டை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ – தூத்துக்குடி.

கதர் மற்றும் கிராம தொழில்வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மற்றும் கழக மகளிர் அணி இணை செயலாளர் சக்தி கோதண்டம் – சிவகங்கை, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, கழக செய்தி தொடர்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் – திருச்சிராப்பள்ளி.

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செ.ம.வேலுசாமி, கழக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், கழக செய்தித் தொடர்பாளர் மகேஸ்வரி – நீலகிரி, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பு.தா.இளங்கோவன் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி, மற்றும் கழக சிறுபாண்மை நலப் பிரிவு இணை செயலாளர் கா.லியாகத் அலிகான் மற்றும் நடிகை வாசுகி – கிருஷ்ணகிரி.

Exit mobile version