கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் கருணாஸின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் – சட்ட நிபுணர்கள் கருத்து

கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் கருணாஸின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாசுக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக பேரவைத் தலைவர் தனபால் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பேரவைத் தலைவருக்கு எதிராக கருணாஸ், சட்டமன்ற செயலாளரிடம் கருணாஸ் இரண்டு மனுக்களை அளித்துள்ளார்.

பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாகிறார் என்பது ஒரு மனு, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் 2-வது மனு. இந்த மனுக்கள் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சபாநாயகரை பதவி நீக்க கோரி ஒரு எம்.எல்.ஏ. தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால், கட்சி தலைமைக்குத்தான் முதலில் பரிந்துரைக்க வேண்டும், பேரவை செயலகத்தில் மனு கொடுக்க கூடாது என்ற விதியை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேரவைத் தலைவருக்கு எதிராக கருணாஸ் மனு கொடுத்திருப்பதால், கட்சி விதிகளை மீறிய அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது அவர்களது கருத்து.

எனவே இதை அடிப்படையாக வைத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்படி கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை மிக எளிதாக அ.தி.மு.க. தலைவர்களால் பறிக்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version