கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு

பாண்டிராஜ் இயக்கி கார்த்தி நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். கிராமத்து குடும்ப பின்னணியில் விவசாயத்தை மையமாக வைத்து உருவகியுள்ள இப்படத்தில் சத்யராஜ் சாயிஷா உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரில் வெளியானது. இப்படத்தை பார்த்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, வெகுவாக பாரட்டியுள்ளார் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வெங்கையா, சமீபத்தில் சின்னபாபு படத்தை பார்த்ததாகவும், கிராமத்து பசுமை பிண்ணனியில் நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை, வாழ்க்கை முறையை ஆபாசம் இல்லாமல் சுவாரஸ்யமான முறையில் நல்ல படமாக தந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version