கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடிவு

கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே ஈடுகட்டுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேநேரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, ரூபாய் மதிப்பு அடிப்படையில் கச்சா எண்ணெய் விலை 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதி அளவை குறைத்துக் கொள்ள இந்தியா திட்டமிட்டு வருகிறது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு தேவையான கச்சா எண்ணெயை கையிருப்பு வைத்திருக்கும். இதை குறைப்பதன் மூலம், இறக்குமதியையும், டாலருக்கான தேவையையும் குறைக்க முடியும் என அரசு கருதுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version