ஓம்மேல ஒரு கண்ணு- தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அடிபோடும் எஸ்.வி சேகர்

 

பாஜக தலைவர் பதவியை ஏற்க தயார் என நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்த எஸ்.வி சேகர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது , அவரிடம் ,தமிழக பாஜக தலைமையை நீங்கள் ஏற்கவில்லை என்ற கருத்து உள்ளதால் செயற்குழுவுக்கு உங்களை அழைக்கவில்லை என்கிறார்களே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இந்தக் கேள்வியை தவறாகப் புரிந்து கொண்ட அவர், பாஜக தலைமையை ஏற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு, இப்போது உள்ள வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை என்னால் உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

உடனே செய்தியாளர்கள் நாங்கள் அப்படி கேட்கவில்லை என்று கூறினர். பாஜக தலைமையை தாங்கள் மதிக்கவில்லையா என்றுதான் கேட்டோம் என்று கூற ,
ஓ அப்படி கேட்டீர்களா? என்றார் எஸ்.வி சேகர்.

பின்னர் பதிலளித்த அவர், நம்மை அழைத்தால் தான் போக முடியும் என்றார். தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லணுமா? அவங்க எனக்கு வயசுல சின்னவங்க… அப்படியே சொல்லணும் என்றால் தங்கச்சி என்றுதான் கூறவேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து எஸ்.வி.சேகர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version