ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க 17வது நாளாக தடை

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு 80,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக குறைந்துள்ளது. தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு விநாடிக்கு 28,057 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 7,013 கன அடி நீரும், வெண்ணாற்றில் 2,022 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில் 2,513 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 7,018 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக நேற்று மூடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி டெல்டா பகுதிகளில் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தொடர்ந்து 17வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version