ஏ.சி., பிரிட்ஜ் உட்பட 19 பொருட்களுக்கு சுங்க வரி உயர்ந்தது!

ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் மீதான வரி, 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சலவை இயந்திரம் உள்பட 19 பொருட்களின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவாலும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்ட19 பொருட்கள் மீதான சுங்க வரி உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல், தங்க நகைகள் மீதான சுங்கவரி 15ல் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரேடியல் டயர் மீதான இறக்குமதி வரி 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களின் வரி 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் ஸ்பீக்கர், காலணிகள் மீதான வரி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, விமான எரிபொருள் மீதான சுங்க வரியும் உயர்கிறது. இதனிடையே, நடப்பாண்டு கணக்கு பற்றாக்குறையை சரி செய்வதற்காக சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version