எச்.ராஜாவுக்கு எதிராகக் களத்தில் குதித்த இந்து அறநிலையத் துறை ஊழியர்கள்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் அவரது வீட்டுப் பெண்களை அவதூறாகப் பேசியதை கண்டித்து ஊழியர்கள் பணிகளை புறக்கணித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் அவரது வீட்டுப் பெண்களை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி, கடலூர் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பாக பணிகளை புறக்கணித்து, கருப்பு பேட்ச் அணிந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், எச்.ராஜாவைக் கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். எச்.ராஜாவைக் கைது செய்யப்படவில்லை என்றால், தலமைக் குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Exit mobile version