உஷார்.! நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கணும்.. மிஸ்ஸானால் தேடி வரும் அபராதம்.!

பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பெயரில், வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, பதிவு எண் பலகை வாகனங்களுக்கு, போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். இதனால் போக்குவரத்து போலீசாருக்கும், துணிக்கடை வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இராயபுரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மாரியப்பன், வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, வாகன பதிவு எண் பலகைகளை சரி செய்ய, வியாபாரிகளுக்கு 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.

Exit mobile version