உலக கோப்பை ஹாக்கி தொடக்க விழா-ஏ.ஆர்.ரஹ்மானின் ரிதம் ரெடி.

ஒடிசாவில் நடக்க உள்ள, உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தொடக்க விழாவில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசாவில் வரும் நவம்பர் மாதம் 28-ந் தேதி, 14-வது உலகக்கோப்பைக்கான ஹாக்கி போட்டி தொடங்க இருக்கிறது.

இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை போட்டியின் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று இசையமைக்க உள்ளதாக ஒடிசா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பழம்பெரும் எழுத்தாளர் குல்சார் சஹாப் எழுத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், உலகக்கோப்பைக்கான பாடலை இசையமைத்து பாடவுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டியின் தொடக்க விழாவில் ,நேரடி நிகழ்ச்சியிலும் ஏ .ஆர் .ரஹ்மான் பங்கேற்று பாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version