உடைந்த கொள்ளிடம் அணையில் இறுதிக்கட்ட பணிகள்

திருச்சி அருகே உடைந்த கொள்ளிடம் மேலணையின் பணிகள் 2 வார காலத்திற்குள் முடிந்துவிடும் என பொதுப்பணித்துறை இணைச் செயலாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, திருச்சி கொள்ளிடம் மேலணையில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து, ஆகஸ்ட் 24-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு, தற்காலிக அணைக்கு 95 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தார்.

மேலும், புதிய அணை கட்டுவதற்கு 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் அணைக்கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், பொதுப்பணித்துறை இணை செயலாளர் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மேலணையின் பணிகள் 2 வார காலத்திற்குள் முடிந்துவிடும் என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

Exit mobile version