இலக்கிய ரசனை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்

மலேசியாவின் முன்னோடி எழுத்தாளர்களுடன் இளம்தலைமுறை எழுத்தாளர் ம.நவீன் மேற்கொண்ட நேர்காணல்கள் மீண்டு நிலைத்த நிழல்கள் என்ற புத்தகம், ம.நவீன் எழுதிய போயாக் என்ற சிறுகதை தொகுப்பு, உலக சினிமாக்கள் குறித்து சரவண தீர்த்தா எழுதிய ஊதா நிற தேவதைகள் ஆகிய மூன்று நூல்கள் அறிமுகம் நடைபெற்றது. விழாவில் தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் ஜெயமோகன், ரசனை அடிப்படையில் நூல்களை பட்டியலிட வேண்டியது அவசியம் என்றார். தமிழ் இலக்கிய பரப்பில், அதுபோன்ற பட்டியலை 1960-களில் க.நா.சு. வெளியிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் தான் எழுதிய தமிழ் இலக்கிய நாவல் அறிமுகம் என்ற நூல் ஏற்படுத்திய அதிர்வலைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். ரசனை அடிப்படையில் எழுத்துக்களை வகைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் ஜெயமோகன் கூறினார். விழாவினை யாவரும் பதிப்பகத்தின் ஜீவ கரிகாலன், வல்லினம் பதிப்பகத்தின் ம.நவீன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், கவிதைக்காரன் இளங்கோ உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Exit mobile version