இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 4 -ம் தேதி வெளியாகும்

தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் பணி மேற்கொள்ள 4 கட்ட சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், அவர்களுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ நாளை ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version