இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பேட்ட. ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு லக்னோவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

படத்தில் ரஜினி இளமையான தோற்றத்தில் இடம்பெறும் காட்சிகள் லக்னோவில் எடுக்கப்பட்டு வருகிறதாம். இப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் நடிக்கிறார். முதல்முறையாக இப்படத்தின் வாயிலாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version