இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேரம் மருந்துக்கடைகள் அடைக்கப்படும்

ஆன்லைன் விற்பனையை கண்டித்து இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேரம் மருந்துக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் மருந்துகள், மருந்து கடைகளில் மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலை மாறி ஆன்லைனிலும் மருந்துகள் வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் விற்பனை, மருந்து கடைக்காரர்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆன்லைன் மருந்து விற்பனையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், 24 மணி நேரம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட மருந்துகடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை மருந்து கடைகள் மூடப்படுகின்றன. நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் மருந்து கடைகள் அடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version