இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்! வைரலாகும் வீடியோ

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தானியர் ஒருவர் பாடிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையேயான லீக் சுற்றில், இந்தியா அபார வெற்றிபெற்றது. போட்டிக்கு முன்னதாக இருநாட்டு தேசிய கீதங்களும் மைதானத்தில் இசைக்கப்பட்டன.

இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது நாட்டு தேசியக் கொடியை போர்த்தியபடி, மிகுந்த மரியாதையுடன் இந்திய தேசிய கீதத்தை பாடினார். இந்தக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Exit mobile version