இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்!

இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டி, 5 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை 4க்கு ஒன்று என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இந்திய அணி, 10 வது முறையாகத் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஓய்வுக்குப் பிறகு கேப்டன் விராட் கோலி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்த இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version