இந்தியாவின் புதிய தங்க மங்கை சர்னோ பாத்

18 வது ஆசிய ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிலும், பலம்பாங் நகரிலும் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளின் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ராஹி சர்னோபாத் பெற்றுள்ளார். தற்காப்பு கலைகளில் ஒன்றான வுசூ விளையாட்டில் சான்டா பிரிவில் நரேந்தர், சூர்யா பானு பர்தாப், சந்தோஷ் குமார், ரோஷிபினா தேவி ஆகிய 4 இந்திய வீரர்களும் வெண்கலப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 15 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

Exit mobile version