இந்தியன்-2 பாகத்திலும் கமலுக்கு 2 வேடங்கள்

இந்தியன் இரண்டாம் பாகத்திலும் கமல்ஹாசன் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996 ஆண்டு வெளியான இந்தியன் படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவித்தது. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்து இருந்தார். இந்தியன் தாத்தாவாக நடித்த சேனாதிபதி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தநிலையில், இந்தியன் – 2 படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக நயன்தாரா, முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவகன நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Exit mobile version