இடைத்தேர்தலில் போட்டியா ? – விஷால் சொல்லுவது என்ன ?

நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், இருந்து வருகிறார்.

தனது இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழாவில், மக்கள் நல இயக்கத்தையும் அதன் கொடியையும் அறிமுகப்படுத்தி, தேவைப்பட்டால் இந்த இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், தேர்தல் தேதி அறிவிக்கும் போது தனது முடிவை அறிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில், போட்டியிட விஷால் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version