ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 பள்ளப்பட்டியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை எம்ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தீபாவளி நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 
மக்களவை துணை சபாநாயகர் திருச்சி முதல் கரூர் வரை, கரூர் முதல் கோவை வரை மத்திய அரசின் பசுமை வழிச்சாலையை கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகிறார் எனவும், அவரை குறை கூறுவது தவறு என்றும் தெரிவித்தார்.

Exit mobile version