ஆட்டோகிராபையும், 96-யும் ஒப்பிடாதீர்கள் – சேரன் வேண்டுகோள்

ஆட்டோகிராபையும், 96-யும் ஒப்பிடாதீர்கள் – சேரன் வேண்டுகோள்

ஆட்டோகிராப் திரைப்படத்தையும், 96 திரைப்படத்தையும் ஒப்பிட வேண்டாம் என்று இயக்குனர் சேரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிக் கால காதலை அசைபோட்டு திரும்பி பார்க்க வைத்து வெற்றி பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். 2004-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் சக்கைப் போடு போட்டது.

தற்போது வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 96. இதுவும் பால்யகால நினைவுகளையும், பள்ளிப்பருவ காதலையும் மையப்படுத்தி உருவாகி உள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள இத்திரைப்படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வணிகரீதியாக பெருவெற்றி வருகிறது.

இந்நிலையில் ஆட்டோகிராப் படத்தை இயக்கிய சேரன், 96 படத்தை நேற்று பார்த்தார். பின்னர் பேசிய அவர், ஆட்டோகிராப் படத்தையும், 96 படத்தையும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்றார்.

இரண்டுமே பள்ளிப் பருவ காதலை பேசினாலும், கோணங்கள் வேறு என்றார். அழகி, ஆட்டோகிராப், 96 இந்த மூன்று திரைப்படங்களுமே நாஸ்டால்ஜியா வகையைச் சேர்ந்தது என்ற அடிப்படையில் தமிழ் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version