அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

2 நாள் பயணமாக வரும் அவர், டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா 19வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது, எஸ்- 400 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன் மதிப்பு ரூ.36,792 கோடியாகும்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரையும் அதிபர் புதின் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து 19வது ஆண்டாக இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்தியா – ரஷ்யா கூட்டு பயிற்சி குறித்து மோடியும், புதினும் விவாதிக்க உள்ளனர். இருநாட்டு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Exit mobile version