அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

 

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை  அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பண்ணை பசுமை மையத்தில் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மையத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 76 பண்ணை பசுமை மையங்கள் இருப்பதாகவும், இந்த மையங்களில் மூலமாக காய்கறிகள் வெளி சந்தையை விட குறைவான விலையில் விற்கப்படுவதாக கூறினார். வரும் நாட்களில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மக்களின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version