அதிமுக அமோக வெற்றி பெறும் – தனியரசு உறுதி

இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான தனியரசு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் நடைபெற்ற கொங்கு இளைஞர் பேரவை ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று தனியரசு குறிப்பிட்டார்.

Exit mobile version