அடுத்த மாதம் 8ஆம் தேதி பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெற இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், வரும் 8ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

Exit mobile version