அடுத்த படத்திற்கு ரெடியாகும் விக்ரம்…

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் புதிய முயற்சியை எடுப்பவர் நடிகர் விக்ரம். அந்த அளவிற்கு பல கெட்டப் போட்டவர். இந்நிலையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் கர்ணன் படத்தில் நடிக்கவுள்ளார். ரூ 200 கோடி பட்ஜெட் வரை உருவாகும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட் ஆகியுள்ளனர். தற்போது ஐ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் மீண்டும் இப்படத்திற்காக உடல் எடையை கடுமையாக ஏற்றி வருகிறார். ஏனெனில் கர்ணன் என்பவன் உடல் அளவிலும் வலிமையானவன் என்பதால் தன் உடல் எடையை விக்ரம் ஏற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, இயக்குநர் ஹிரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாமி 2 திரைப்படம் முடிவடைந்து டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version