அடிகளாரின் மறைவு ஆன்மிகத்திற்கு பேரிழப்பு – எஸ்.பி.வேலுமணி

அன்னூர், முதலிபாளையத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தமிழ் வளர்ச்சிக்காக தொண்டாற்றி உள்ளார். 1956ஆம் ஆண்டு கோவையில் தமிழ் கல்லூரியை நிறுவினார். ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு நெறிகளை அறிமுகப்படுத்தி, நூற்றுக்கணக்கான கோயில்களில் திருநெறிகளை நடத்தினார். கடந்த 10 நாட்களாக மூச்சுத்திணறால் அவதிப்பட்டு வந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளால், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் திருமட வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்வேறு மடங்களை சேர்ந்தர்கள், துறவிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடலுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், பேரூர் தமிழ் கல்லூரி, தமிழ் மொழி வளர்ச்சியில் முதன்மையாக உள்ளதாக தெரிவித்தார். அடிகளாரின் மறைவு தமிழுக்கும், ஆன்மிகத்திற்கு பேரிழப்பு என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார்.

Exit mobile version